திருவாரூர் மாவட்டத்திலுள்ள மகளிர் விடுதி பாதுகாப்பாக செயல்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஏதேனும் ஆட்படுகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர, குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகளை நேரில் சென்று காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றார் அவர்.
மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு சென்னை சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி அனில்குமார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதன் உட்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நலக்குழும தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக