திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஜன. 20 முதல் 27 ஆம் தேதி வரை கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய ஊர்களில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொரடாச்சேரியில் பேரூராட்சித் தலைவர் செந்தில்குமார் ஒன்றியக்குழுத் தலைவர் தாழை.மு. அறிவழகன், நீடாமங்கலத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டியில் வார்டு உறுப்பினர் நடராஜன், கோட்டூரில் ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் தங்கையன் ஆகியோர் பங்கேற்றனர். முகாம்களில் 560 தொழிலாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். புதிதாகப் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்பட்டது என்று மாவட்டத் தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக