திருத்துறைப்பூண்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜேசீஸ் சங்கம், ஜி.டி. பவுண்டேஷன், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் பி.கே.டி. மருத்துவக் குழும வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஜேசீஸ் தலைவர் ஆர். அரவிந்த் தலைமை வகித்தார். அனன்யா கருத்தரிப்பு மைய இயக்குநர் டாக்டர் ஷருண் முன்னிலை வகித்தார். ஜி.டி. பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் டி. ராஜா முகாமை தொடங்கிவைத்தார். இந்த முகாமில் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று 100 பேரை பரிசோதித்தனர். இதில் 22 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜேசீஸ் சங்க இணைச் செயலர் எம்.எஸ். மணிவண்ணன் நன்றி கூறினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக