திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கம், நமது நெல்லை காப்போம், கிரியேட் இணைந்து பாரம்பரிய விதை நெல் வழங்கும் திட்டம் தொடக்க விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. லயன்ஸ் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், நம்மாழ்வார் கருத்துகளால் இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்த உணவுதான் உண்ண வேண்டும் என்ற தாக்கம் நகரவாசிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய விதை நெல் ரகத்தை உழவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.78 ஆயிரம் மதிப்பீட்டில் 500 உழவர்களுக்கு தலா இரண்டு கிலோ வீதம் விதை நெல், 500 ஏக்கர் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் செய்திட வழங்கியுள்ளோம். மேலும் தொடர்ந்து பாரம்பரிய விதை நெல் உழவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.
விழாவில் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பேசுகையில், டெல்டா மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் வறட்சி, வெள்ளம், புயல் என இயற்கை சீற்றங்களால் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை பாரம்பரிய நெல் சாகுபடி பரப்பும் நோக்கத்தில் திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உவர்நிலம், கடல் ஓர நிலம், மானவாரி நிலம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நெல் ரகம் மருத்துவ குணம் கொண்ட ரகம் வழங்கப்பட்டுள்ளது என்றார். லயன்ஸ் சங்க செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் வேதமணி மற்றும் உறுப்பினர்கள், கிரியேட் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக