திருத்துறைப்பூண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன பள்ளி மாணவனை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.
திருத்துறைப்பூண்டி ரொக்கக்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் பி. லெனின். இவரது மகன் தமிழழகன் இங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து மாணவனை தேடிவந்தனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. அருண் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் ராஜ்குமார், சிங்காரவேலு, முருகன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படையினர் காணாமல் போன மாணவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த மாணவன் இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அந்த மாணவர் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பேருந்தில் வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பாமணி கிழக்கு கடற்கரை சாலையில் நடத்திய வாகன சோதனையின் போது, தமிழழகனைக் கண்டுபிடித்த தனிப்படை போலீஸார் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக