திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. தலைவர் வக்கீல் ராஜாராமன் வரவேற்றார். செயலாளர் பாலு செயல் அறிக்கை வாசித்தார். புதிய தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் கணேசன், பொருளாளர் குமணன் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களை மாவட்ட துணை ஆளுநர் ஆதப்பன் பணியமர்த்தினார். மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோகா பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2,3,4 இடங்களை பிடித்த திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆலிஸ்எமிலி, தலைமையாசிரியை அந்தோணிமேரியிடம் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ரோட்டரி சங்கம் சார்பில் பாண்டிச்சேரி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் ஒரு மாணவனுக்கும் மருத்துவக்கல்லுாரியில் ஒரு நர்சிங் மாணவிக்கும் இலவசமாக படிக்க ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாதவிக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. நாட்டுநலப்பணித்திட்டத்தில் மாநில அரசின் விருது பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்அலுவலர் சக்கரபாணிக்கு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆதிரெங்கம் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வர்த்தகர்கள் சங்கம், லயன்ஸ், ரோட்டரி, டெல் டா ரோட்டரி, ஜேசீஸ், இன்னர்வீல் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக