திங்கள், 6 ஜூலை, 2015

காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா கூட்டத்தில் தீர்மானம்

திருத்துறைப்பூண்டி, : காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தமாகா செயல் வீரர்கள் கூட்டம்  நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, பொதுக்குழு சிறப்பு அழைப்பாளர் கருணாநிதி, வட்டார தலைவர்கள் ராஜ், திருமுருகன், மாவட்ட செயலாளர்கள் சத்தியநாராயணன், மதியரசு, கோட்டூர் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், எழிலரசன், முத்துப்பேட்டை வட்டார தலைவர்கள் சாமிதுரை, காந்திநாராயணன், நகர தலைவர் நடராஜ சுந்தரம், விவசாய சங்க தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார்.

மாவட்ட தலைவர் தினகரன்,  பொது செயலாளர் கங்கை செல்லத்துரை, கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் கரிகாலன், மாவட்ட இளைஞரணி தலைவர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிங்குபாண்டியன், பேச்சாளர் அருணாராஜேந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், வரும் 15ம் தேதி தஞ்சையில் தமாகா சார்பில் நடைபெறும் காமராஜ் பிறந்தநாள் விழாவிற்கு திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற தொகுதியிலிருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. ஹெல்மெட் அணிவதன் காலஅவகாசத்தை நீட்டித்துதர வேண்டும். ஹெல்மெட்டை தமிழக அரசு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். நகர பகுதியில்   பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கவேண்டும். காவிரி  டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka