சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாரூரில் வியாழக்கிழமை, ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் மேலும் பேசியது: கங்களாச்சேரி சா.வீ. ராமகிருஷ்ணன்: கங்களாஞ்சே ரி, மூங்கில்குடி வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தண்ணீர் வருவதற்குள் அகற்ற வேண்டும். அனைத்து நெல் விதைகளுக்கும் கிலோவுக்கு ரூ. 15 மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவுக் கடன் காலத்தில் கொடுக்க வேண்டும்.
திருவாரூர் பி.எஸ். மாசிலாமணி: ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேட்டூர் அணை திறந்தால் சம்பா சாகுபடி நீண்டகால பயிர்களுக்கு நன்றாக இருக்கும்.
திருவாரூர் பவுன்ராஜ்: புதைச் சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட கேக்கரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருத்துறைப்பூண்டி தமிழ்ச்செல்வி: 2012-13 ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்து நிகழாண்டுக்கு புதிய கடன் வழங்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி பாலகிருஷ்ணன்: முள்ளையாற்றில் கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறாத விவசாயிகள் சம்பாவில் பயன்பெறும் வகையில் சம்பா சிறப்புத் திட்டத்தை அறிவித்து பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருத்துறைப்பூண்டி ஜெயராமன்: அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் சம்பாவில் நீண்டகால சாகுபடி குறித்து வேளாண் அலுவலர்கள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும்.
ஆட்சியர் எம். மதிவாணன்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாவட்டத்தில் பணியாற்ற 43,000 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இப்பணிக்கு வருவது 18,300 பேர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் வருவார்களேயானால் நிதி தாராளமாக ஒதுக்கப்படும் என்றார் மதிவாணன்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், வெண்ணாறு கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக