திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டியில் 2 இடத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் கல்விப்படி வழங்கிட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி உடன் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.
அரசு துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ள நிலையில் அந்த பணிகளை கூடுதலாக சேர்த்து பார்க்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு வட்ட செயலாளர் மணிவண்ணன், தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் மதியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பைரவநாதன், வட்ட இணை செயலாளர்கள் தருமையன், ரூபன், வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் நந்தகுமார், பொருளாளர் தமிழ்ச்செல்வி, முன்னாள் பொருளாளர் வசுமதி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் வேதரெத்தினம், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக