திங்கள், 7 செப்டம்பர், 2015

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் விமான நிறுவனத்தில் 598 அதிகாரி பணிகள்


விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 202 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 60 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் உள்ளன.

அதேபோல ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணியிடங்களில் ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 42 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31-10-15 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பாடங்களில் என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் பூர்த்தி செய்தவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை :

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 2014, 2015-ம் ஆண்டுகளின் கேட் தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்டெப்-1 படிவம் சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு ஸ்டெப்-2 படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 9-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை    www.aai.aero  என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka