திருத்துறைப்பூண்டி டி.மு. கோர்டு சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இயங்கி வந்தன. மன்னார்குடி சாலையில் விரைவு நீதிமன்றம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம், பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அரசு ரூ.3 கோடியே 68 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.
100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மன்னார்குடி சாலையில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு, குற்றவியல் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து டி.மு. கோர்டு சாலையில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைமை நீதிபதி ஜாகீர்உசேன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராம் ஆகியோர் பூமிபூஜைக்கு அடிக்கல் நாட்டினர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர் அருள்செல்வன், செயலாளர் ரஜினி, பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக