ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் -அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Image result for அரசு ஊழியர் சங்கதிருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர் சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12-வது வட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர்கள் சத்தியராணி, ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வட்ட இணை செயலாளர் தர்மையன், வட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், வட்ட துணைத்தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் ஜெயபாலன், மாவட்ட இணை செயலாளர்கள் முருகானந்தம், வண்டார்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் நன்றி கூறினார்.

வேளாண்மை கல்லூரி

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

திருவாரூர்-அகஸ்தியன்பள்ளி, காரைக்குடி அகல ரெயில் பாதை திட்ட பணியை விரைந்து முடித்திட வேண்டும். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் மாதிரி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு செய்தமைக்கு தமிழக அரசை பாராட்டுவது. மேலும் கட்டிடம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக சிவக்குமார், செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக வாசுமதி, துணைத்தலைவர்களாக வெங்கடேசு, ரூபன், ராமசாமி உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka