திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வாட்டார் வாளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் பைங்காநாடு அருகே உள்ள வண்ணார்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. மனைவி பெயர் மாலா (35). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மாலா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் மேரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் எனது கணவர், மாமனார் தங்கராசு, மாமியார் தனலெட்சுமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் எஸ்ஐ வெர்ஜினியா மற்றும் போலீசார் மாலாவின் கணவர் சண்முகம் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி
வருகிறார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக