திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த 11 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆதிச்சப்புரம், அக்கிரஹார தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமானுஜம் (85). இவர் வயது மூப்பின் காரணமாக நினைவு இல்லாத நிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.
ராமானுஜம் வீட்டின் பின்பக்கக் கதவு செவ்வாய்க்கிழமை மாலை தட்டப்பட்டதையடுத்து, வீட்டில் இருந்த அவரது மனைவி கனகவல்லி (75) கதவை திறந்துள்ளார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கனகவல்லியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினராம். இதில், மயங்கி விழுந்த கனகவல்லி சுமார் 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அவர் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதும், பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் திருட்டுப் போனதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணதாசன், கோட்டூர் காவல் ஆய்வாளர் ஆனந்தபத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில், கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் தடய பதிவும், திருவாரூரிலிருந்து அழைத்து வரப்பட்ட மெர்சி மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக