திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கம், லியோ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு விஜிலா மஹாலில் நடைபெறுகிறது. தலைவர் கைலாசநாதன் வரவேற்கிறார்.செயலாளர் சுப்பிரமணியன் செயல் அறிக்கை வாசிக்கிறார். புதிய தலைவராக கே.எஸ்.செந்தில்குமார், செயலாளராக சக்கரபாணி, பொருளாளராக வேதமணி, லியோ சங்க தலைவராக செல்வஅரசன், செயலாளராக பாலாஜி, பொருளாளராக சக்தீஸ்வரன் மற்றும் இதர நிர்வாகிகளை மாவட்ட முன்னாள் ஆளுநர் சுப்பிரமணியன் பதவியில் அமர்த்தி பேசுகிறார். பட்டி மன்ற பேச்சாளர் ராஜா, மாவட்ட ஆளுநர் தேர்வு வேதநாயகம், மண்டல் தலைவர் ரவிச்சந்திரன், வட்டார தலைவர் செபாஷ்ரோலி ஆகியோர் பேசுகிறார்கள். விழாவில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக