திருத்துறைப்பூண்டி அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுது பார்க்க வந்திருந்த 100 டிவிக்கள் சேதமடைந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (45). கட்டிமேடு கடைத்தெருவில் மாடியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை கடை தீடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வீரமணி தலைமையில் வீரர்கள் சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பழுதுபார்க்க வந்த 100க்கும்மேற்பட்ட பழைய டிவிகள் எரிந்து சாம்பலாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக