திருவாரூர் அருகே மாவூரில் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவூர் கடைவீதியில் பேருந்து நிலையம் அருகே பள்ளி, கோயில் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியில் மதுபானக்கடையும், பாரும் உள்ளது. இங்கு மது குடிப்பவர்களின் தொல்லை அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியுள்ளனர். ஆனால், இதுவரை கடையை அகற்றாததால், மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினாó போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் அலுவலர்கள், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக