அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி பொதுமக்களை திரட்டி வெள்ளக்குடி ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
திருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமைக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் விஷ்ணுகுமார், ஜெய்சங்கர், தஞ்சை மாவட்ட நிர்வாகி அருணாசலம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிலால், மகேந்திரன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் இரணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் மீத்தேன் எடுப்போம் என்று கூறியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. எனவே மத்திய அரசு மீத்தேன் திட்டத்திற்காக செய்துள்ள ஒப்பந்தங்களை உடனே ரத்து செய்ய வேண்டும். மீத்தேன் திட்டம் குறித்து தமிழக அரசு நியமித்த ஆய்வுக்குழு, தனது ஆய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்த நிலையை பற்றி தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாய் உடைப்பால் நடந்த தீவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
முற்றுகை போராட்டம்
வெள்ளக்குடி பகுதியில்¢¢ 22 ஏழை குடும்பங்கள் அங்குள்ள ஒ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த குடும்பங்களுக்கு மாற்று வீட்டு மனை, வேலை கேட்டு பல முறை மனு கொடுத்தும் அரசும், ஒ.என்.ஜி.சி. நிறுவனமும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற மார்ச் 14-ந் தேதி அனைத்து தரப்பினரின் உறுதுணையோடு, பொதுமக்களை திரட்டி வெள்ளக்குடி ஒ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனத்தை முற்றுகையிடும் போரட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மக்களை அணி திரட்ட மார்ச் மாதம் காவிரி படுகை பகுதியில் பரப்புரை பயணம் மேற்கொள்வது. தமிழக மக்களின் 40 சதவீத உணவு தேவைகளையும், 5 கோடி மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வரும் காவிரிப்படுகையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவிரி படுகையினை பாதுகாக்கப்பட்ட விவசாயம் பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக