விவசாயிகள், பருவ சூழலுக்கு ஏற்ப விவசாய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது அவசியம் என கலெக்டர் மதிவாணன் அறிவுறுத்தி உள்ளார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, வலங்கைமான், கொரடாச்சேரி, குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 6 வட்டாரங்களில் தலா 5 கிராமங்களை தேர்வு செய்து, அந்த கிராமங்களை சேர்ந்த 20 விவசாயிகளுக்கு பருவநிலை முன்அறிவிப்பை புரிந்து கொள்ளுதல் தொடர் பான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற விவசாயிகள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும், காரைக்கால் வேளாண்மை கல்லூரிக்கும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வானிலை ஆய்வுக்கு பயன் படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பருவநிலை முன்அறிவிப்பு தொடர்பான பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கூத்தாநல்லூர் அருகே உள்ள வக்ராநல்லூர் ஏ.எம்.இசட். விவசாய பண்ணையில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் மதிவாணன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
விழாவில் கலெக்டர் கூறியதாவது:-
தொழில்நுட்பங்கள்
கால நிலை பேரிடர் மேலாண்மை உழவர் வயல் வெளி பள்ளியில் பயிற்சி பெற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சக விவசாயிகளுக்கு, பருவ நிலை மற்றும் பருவ நிலைக்கு ஏற்ற பயிர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். பருவகால சூழலுக்கு ஏற்ற விவசாய தொழில் நுட்பங் களை கடைப்பிடிப்பது அவசியம். இது அதிக மகசூல் பெற வழிவகை செய்யும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது:-
வழிமுறைகள்
பருவகால சூழ்நிலையை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செய்யப் பட்டுள்ளது. கால சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன் கூட்டியே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன் ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிச்சந்திரன், மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தஞ்சாவூர் சூழ்நிலையியல் ஆராய்ச்சி மைய செயலாளர் பழனியப்பன், கோவை வேளாண்மை பல்கலைக்கழக தொழில் நுட்ப குழு உறுப்பினர் ரெங்கநாதன், வக்ராநல்லூர் ஊராட்சி தலைவர் துரைராஜ், துணை தலைவர் சேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வக்ராநல்லூர் ஏ.எம்.இசட். விவசாய பண்ணையின் நிறுவனர் ஏ.எம்.இசட்.ஜியாவுதீன் வரவேற்றார். முடிவில் தஞ்சாவூர் சூழ்நிலையியல் ஆராய்ச்சி மைய வேளாண்மை வல்லுனர் கலைவாணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக