கோட்டூர் அருகே ஆட்டு பண்ணையில் ஏற்பட்ட
தீவிபத்தில் அதன் உரிமையாளர் கருகி பலியானார். மேலும் 24 ஆடுகளும் இறந்தன.
தீவிபத்து
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள குமாரமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் வில்லியம்ஜேம்ஸ்(வயது52). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பனையூர் ஊராட்சி வேலைக்காரநல்லூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் கீற்று கொட்டகை அமைத்து ஆட்டு பண்ணை வைத்திருந்தார். அந்த நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். வில்லியம்ஜேம்ஸ் தினமும் இரவு நேரத்தில் இப்பண்ணையில் தூங்குவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் இரவு பண்ணையில் அவர் தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கீற்று கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கோட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் ஆட்டு பண்ணை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
பண்ணை உரிமையாளர் பலி
இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன், கோட்டூர் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார்கள் மதியழகன் (திருத்துறைப்பூண்டி), ரெங்கசாமி (மன்னார்குடி) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டுபண்ணைக்குள் சென்று பார்த்த போது பண்ணைஉரிமையாளர் வில்லியம்ஜேம்ஸ் தீயில் கருகி இறந்து கிடந்தார். மேலும் 4 ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தன. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தீவிபத்தில் சேதமதிப்பு ரூ.5 லட்சம் என தெரிகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக