சனி, 28 பிப்ரவரி, 2015

மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்





திருத்துறைப்பூண்டி, :கிராமம் கிராமமாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்று ஏஐடியூசி மீனவ தொரிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.தமிழ்நாடு ஏஐடியூசி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர்கள் முருகையன், ராமதாஸ், துணை செயலாளர் தங்கமணி மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சாந்தி வரவேற்றார்.  எம்எல்ஏ உலகநாதன் நலவாரிய அட்டை வழங்கி பேசினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், துணை செயலாளர் ராஜா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்தரசேகர ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில், மீனாகுமாரி கமிஷன் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கான சிறுதொழில் வங்கிக்கடன் உடன் வழங்க வேண்டும். வார சந்தைக்கு நிரந்தர இடம் ஒதுக்கிட வேண்டும். மீனவர் நல வாரிய உறுப்பினர் அட்டை உள்ள அனைவருக்கும் குடியிருக்க வீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கிராம கிராமமாக மீனவ மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநரை அடிக்கடி பணி இடமாற்றம் செய்வதை  நிறுத்திட வேண்டும். 65 வயது ஓய்வூதியம் ரூ.400  என் பதை ரூ.2500 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka