செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் கலெக்டர் மதிவாணன் தகவல்


மழைநீர் சேமிப்பு திட்டம் மூலமாக நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் என கலெக்டர் மதிவாணன் கூறினார்.

கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதா வது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், நீர் நிலை களை பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் கண்டறிவதன் மூலம் பொது மக்களுக்கு நீர் ஆதாரங்களை முழுமையாக பயனளிக்க வைக்கலாம். இதற்கு மாவட் டத்தின் மழை அளவு, நீர் மேம்பாட்டு நிலை ஆகியவற்றை கொண்டு அடிப்படை அறிக்கை ஒன்றை தயார் செய்வது அவசியம்.

கிராமப்புற குடிநீர் திட்டம் மற்றும் நீரின் தன்மை அடிப்படையிலான திட்டங்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பான குடிநீரை கொண்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த நவீன தொழில் நுட்பம் மற்றும் பாரம்பரியமாக அந்தந்த பகுதியில் பொதுமக்களால் கடைப்பிடிக்கப்படும் நீர்பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த நடவடிக்கைகள் மூலமாகவும், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் ஆக்கும் நடவடிக்கை கள் மூலமாகவும் நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை மேம்படுத்தப்படும். வருங்கால சந்ததியினருக்காக நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன் ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சோழன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய புவியியல் வல்லுனர் லெட்சுமணன், வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் பெரிய கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka