திருத்துறைப்பூண்டி, : கொள்முதல்
செய்த நெல் மூட்டைகளை குடோனுக்கு
அனுப்புவதில் அதிகாரிகளின் அலட்சியம் காரண மாக திருத்துறைப்பூண்டி
தாலுகா நெல் கொள்முதல் நிலையங்களில் 2
லட்சம் நெல்மூட்டைகள் தேங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி
தாலுகாவில் 35 ஆயிரம் ஏக்கரில் கடந்தாண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அறுவடை இந்தாண்டு ஜனவரி
முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 28
ஆயிரம் ஏக்கர் சம்பா அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்படும்
நெல் மூட்டைகளை கொள் முதல் செய்வதற்காக தாலுகா முழுவதும் 55 இடங்களில் நேரடி நெல்
கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு
கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற் போது அறுவடை விறுவிறுப்பாக
நடைபெற்று வரு கிறது. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கும் ரூ.3 லட்சம் வரை பணம்
வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் விவசாயிகள் கொண்டுவரும்
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு போதுமான பணம் வழங்க வேண்டும். ஆ
னால் பணம் போதா ததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வைத்து காத்துக்கிடக்கின்றனர். மேலும் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது. இவற்றை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலகுழு உறுப்பினர் விளக்குடி உலகநாதன் கூறுகையில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் 2 அல்லது 3 லட்சம் வரைதான் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் விவசாயிகள் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனாலும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாததால் அதை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு போதுமான பணம் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக