திருவாரூரில் செவ்வாய்க்கிழமை
(பிப்.24) படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞாóகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருவருக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்
புதுவாழ்வு திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் தனியார்
நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கவுள்ளன. எனவே வேலைவாய்ப்பற்ற
8-ம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி, மேல்நிலைக்கல்வி,
தொழிற்பயிற்சி, பட்டயம் மற்றும்
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவாóகள், தோல்வியுற்றவர்கள், திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக்
பள்ளியில் பிப். 24-ம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு
முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
மூன்று மார்பளவு புகைப்படம் மற்றும் கல்வி தகுதிக்கான அசல் மற்றும்
நகல் சான்றிதலுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை 04366 221031 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக