செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நம் தமிழ்நாட்டிலா இப்படி ஒரு ஹைடெக் கிராமமாக காட்சியளிக்கும் ஜமீன் தேவர் குளம் : ஜாதி கட்சிகளுக்கும், கம்பங்களுக்கும் தடை


தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளம் யூனியனில் உள்ள ஜமீன் தேவர்குளம் தான் இப்படியொரு ஹைடெக் கிராமமாக காட்சியளிக்கிறது. 

இதைப் போன்று இருக்க வேண்டும், இவரைப்போன்று இருக்க வேண்டுமென்று கூறுவார்கள். அதே போல் கிராமத்திலும் இந்த மாதிரி கிராமம் போல இருக்க வேண்டும், இந்த கிராமம்தான் திறமையாகச் செயல்படுகிறது என்று கூறுவதற்கு ஏற்றால் போல மிகப் பொருத்தமாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகிறது ஜமீன் தேவர்குளம் இரண்டாம் நிலை  ஊராட்சி. 

குருவிகுளம் யூனியனில் உள்ள 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ள இந்த ஊராட்சிக்கு கமலா பாலகிருஷ்ணன் தான் தலைவியாக இருக்கிறார். அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் கொடிகள், பேனர்கள் முற்றிலும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்,  தகவல்களை அளிக்க ஒலி பெருக்கி, பொதுமக்களுக்கு சவர் பாத் ரூம் என கிராமமே ஹைடெக்காக விளங்குகிறது.  

இது குறித்து பஞ்சாயத்து தலைவி கமலா பாலகிருக்ஷ்ணன் கூறுகையில், "அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். இதன் மூலம் திருட்டு, கொள்ளை போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற முடியும். எல்லா தெருக்களிலும் ஒலி பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்போம். இதன் மூலம் தகவல் சுலபமாக மக்களை சென்றடையும்.  குப்பைத் தொட்டிகள் எல்லா தெருக்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம். இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது. 

ஜமீன் தேவர்குளம் -  துரைச்சாமி புரம், ஜமீன் தேவர்குளம் - முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலை அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் பொதுமக்களுக்கு தனியாக சவர் பாத் ரூமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம்” என்று முடித்தார். 

பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், மெகாசைஸ் போக்கஸ் லைட் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலி பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது.

இந்த கிராமம் போல மாவட்டத்தில் உள்ள ஏன், மாநிலம் முழுவதிலும் கிராமங்களெக்கே முன் மாதிரியாக அமைந்துள்ளது. இதே போல எல்லா பஞ்சாயத்துக்களிலும் செய்தால் மக்கள் பயனடைவார்கள். பலனும் அடைவார்கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka