செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மீத்தேன் திட்டத்தால் நாட்டில் 24 லட்சம் விவசாய நிலம் பாதிக்கும் * சுற்றுச்சூழல் ஆர்வலர் கவலை


மீத்தேன் திட்டத்தை அனுமதித்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க உள்ள பகுதிகளை நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் மீத்தேன் 3 ஆயிரம் அடிக்கும் மேற்பட்ட ஆழத்தில் இருந்து மீத்தேன் வாயுவை வெளியில் எடு க்க மத்திய அரசு அனுமதித்திருப்பதும், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரி விக்காதது வேதனை அளிக்கிறது.
இத்திட்டத்தை அனுமதித்தால் நாட்டில் 24லட்சம் ஏக்கர் விவசாயம் பாதி க்கும். நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் ஆதாயம் இல் லாமல் போவதுடன், பொது மக்கள் மிகவும் அவதிடையும் நிலை ஏற்படும். இந்த வாயுவை வெளிக்கொணர அதிக அழுத்தம் கொடுத்தால் பாறைகள் சேதமடையும் முற்றிலும் மக்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படும். 
திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடியில் 26 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு இன்னல் களுடன்,அச்சத்துடன் வாழ்வாதாக தெரிவித்தனர். 
கமலாபுரம் காட்டூரில் பகுதியில் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக கூறினர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க மத்திய அரசின் நில எடுப்பு அவசர சட்டத்தை கண்டித்து வரும் 24 ம் தேதி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka