தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியத்தின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. பாலசுப்பிரமணியத்தின் மனைவி கஸ்தூரி அளித்த புகாரின் பேரில், திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவராக இருந்த ச.கிருஷ்ண மேனன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2013 மார்ச் 13–ந்தேதி ஒரு விழாவில் பங்கேற்க ரிஷியூர் வந்த திவாகரன், சோம.தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், 2013 மார்ச் 22–ந்தேதி திவாகரனின் ஆதரவாளர்கள், சோம.தமிழார்வனை வழிமறித்து மிரட்டி, அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் திவாகரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தன்னை போலீசார் மிரட்டி திவாகரனுக்கு எதிராக வாக்குமூலம் பெற்றதாக சோம.தமிழார்வன் பிறழ் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்கத்தவறிவிட்டதாக கூறி, திவாகரன், கிருஷ்ணமேனன் உள்பட 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி வேல்முருகன் நேற்று தீர்ப்பளித்தார்.
tks
MALAIMALAR
0 கருத்துகள்:
கருத்துரையிடுக