ஆய்வு கூட்டம்
திருவாரூர் மருத்துவகல் லூரியில் மாவட்ட சுகாதார திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மதி வாணன் முன்னிலை வகித் தார். கூட்டத்திற்கு தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதா வது:-
மருத்துவர்கள் நோயாளிகளி டம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். தாய்-சேய் நல திட்டங் களுக்கு முன்னுரிமை கொடுத்து அதில் அதிக கவனம் செலுத்துவது அவசி யம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களுக்கு குழந்தை பெற்று கொள்ள வரும் கர்ப் பிணி பெண்களிடம் மருத்துவ பணியாளர்கள் பரிவு காட்ட வேண்டும்.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
டெங்கு, பன்றிகாய்ச்சல் போன்ற நோய்களை தடுப் பதற்கு முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மாவட் டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தகவல் பலகை களை வைத்தால், அவை பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருவாரூர் மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பதிவேடுகள்
முன்னதாக திட்ட இயக்கு னர் சண்முகம் புனவாசல், சாத்தனு£ர், உள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு நேரில் சென்று பதிவேடுகளை ஆய்வு செய் தார். அப்போது பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, தடுப்பூசி பதிவேடு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தொடர் பான பதிவேடு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக