திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் இயற்கை
வேளாண் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல்
ரகங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மண்டல மேலாளர் அழகிரிசாமி
பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் இந்த பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களை
பார்க்கும்போது 60 ஆண்டு
காலத்திற்கு முன் சாகுபடி செய்யப்பட்ட நெல்ரகங்களை இங்கு பார்ப்பது மகிழ்ச்சி
அளிக்கிறது. உழவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து அடுத்து வரும்
தலைமுறையினருக்கு அளிக்கவேண்டும் என்றார்.
நமது நெல்லை காப்போம் மாநில
ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், கிரியேட்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக