புதன், 18 பிப்ரவரி, 2015

மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஓட்டல் உரிமையாளர் சங்கம் கோரிக்கை



திருத்துறைப்பூண்டி, : மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
திருத்துறைப்பூண்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் மோகன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ரவிசுந்தர், தீபம் பாஸ்கர், தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.  சிறந்த தொழில் செய்தமைக்காக இளம் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெற்ற திருத்துறைப்பூண்டி அருண் ஸ்வீட்ஸ் உரிமையாளர் அருணை பாராட்டி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் கணேசன், சட்ட ஆலோசகர் பாஸ்கர், திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன், கூத்தாநல்லூர் நகர தலைவர் அப்துல்லா ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில் திருவாரூர், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி, அகல ரயில்பாதை பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைந்து முடிக்கவேண்டும். காவிரியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதை  தடுத்து நிறுத்தவேண்டும். மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஹோட்டல்களுக்கு மாநில விலையில் எரிவாயு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அமுதன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka