ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஓராண்டாகியும் விசாரனை இல்லை * திருவாரூரில் பயனாளிகள் புலம்பல்


திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஓர் ஆண்டா கியும், பயனாளிகளை உரிய இடத்திற்கு சென்று விசாரிக்க அதிகாரிகள் சுணக் கம் காட்டுவதால் சொந்த ஊரில் அகதிகளாக வாழும் அலவலம் ஏற்பட்டு ள்ளது.
புதிதாக திருமனமாணவர்கள் புதிய குடும்ப அட்டைக்கு அனைத்து ஆவணங் களுடன் விண்ணப்பித்து, ஆண்டுகணக்கில் குடும்ப அட்டை கிடைக்காமல் அவதியடைகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பலர் தினசரி தாலுகா அலுவ லகத்திற்கு படை எடுக்கும் அவலம் தொடர்கிறது. 
கடந்த இரு தினங்களாக திருவாரூர் குடிமைப்பொருள் தாசில்தார் அலுவ லகத்தில் பயனாளிகள் பலர் வந்து ஏமாற்றத்துடன், திரும் சென்றனர். அலிவ லத்தை சேர்ந்த புவியரசு என்பவர் புதிதாக திருமணமாகி, தனியாக மனைவியு டன் வசிக்கிறார். 
இவர் தந்தையின் குடும்ப அட்டையில் இருந்து அவர் பெயரையும், துணை வியார் பெயரை அவர் மானார் வீட்டு குடும்ப அட்டையில் இருந்தும்,நீக்கி விட்டு, கடந்த 2013 ம் ஆண்டு டிசம்பரம் 19 ம் தேதி திருவாரூர் தாலுகா அலு வலகத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, அதற்கான வரிசை எண் பதிந்து குடிமை ப்பொருள் தாசில்தார் ஒப்புகை சீட்டு வழங்கினார். ஆனால் இது நாள் வரை உரிய அலுவலகத்தில் இருந்து விசாரனை செய்யாமல் காலம் கடத்து கின்றனர். இதனால் குடும்ப அட்டை கிடைக்குமா என்ற அச்சத்தில் அடிக்கடி அலுவல கம் வந்து விரக்தியுடன் திரும்பி சென்றார்.
அவர் கூறுகையில்: 
புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கு, உரிய ஆவணங்கள் இருந்தால், விண் ணப்பித்த 40 நாட்களில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமரா ஜ் விழா மேடைகளில் பேசி வருகிறார். 
ஆனால் அவருடைய மாவட்டத்தில் வசிக்கும் நாங்கள், அனைத்து ஆவணங் களுடன் புதிய குடு ம்ப அட்டைக்கு விண்ணப்பித்தும், அதிகாரிகள் விசாரனை நடத்தவே வர மறுக்கின்றனர். ஆண்டுகணக்கில் இழுத்தடித்தவாறு அலைய விடுகின்றனர். ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 10 தினங்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என தெரிய வில்லை. குறிப் பாக தாலுகா அலுவலகங்கள் புரோக்கர்கள் ஆதிக்கத்தில் அடிமைப்ப ட்டுள் ளது.
குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி விட்டு,சொந்த ஊரில் அகதிகள் போல் அலையும் அவலம் ஏற்படுகிறது. உரிய அதிகாரிகள் விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka