ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மக்களை பாதிக்கும் திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்-மேதா பட்கர்

 ""மக்களை பாதிக்கும் திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்,'' என்று, சமூக ஆர்வலர்
மேதா பட்கர் தெரிவித்தார்.
திருவாரூர் அருகே வெள்ளக்குடியில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனத்தால், அதன் அருகே குடியிருக்கும், 26 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சமூக ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கி
ணைப்பாளருமான மேதா பட்கர், நேற்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது, 23 ஆண்டுகளாக மிகுந்த இன்னல்களையும் சந்தித்து வருகிறோம். அம்மை போன்ற நோய்கள் அடிக்கடி தாக்கி வருகின்றன. குடிப்பதற்கு நீர் இல்லை. நிலத்தடி நீரில் குளிப்பதால், தோல் அரிப்பு நோய் ஏற்படுகிறது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் எங்களை, இந்த இடத்தை விட்டு காலி செய்யும் நோக்கத்தில், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என, அப்பகுதி மக்கள், மேதா பட்கரிடம், புகார் தெரிவித்தனர்.
அதன் பின், மேதாபட்கர் கூறியதாவது:
பூமியில், 2,000 அடி ஆழத்தில் எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ளதால், இந்த பகுதியில், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு, மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களை பாதிக்கும் எந்த திட்டமானாலும், அதனை செயல்படுத்தக் கூடாது என்று, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில், ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் விவசாய நிலங்களும் மற்றும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை கொண்டு வர, மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே, மக்களை பாதிக்கும் இது போன்ற திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள், உடனடியாக தவிர்க்க வேண்டும். மேலும், மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து, மத்திய அரசுக்கு, எங்கள் அமைப்பின் மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, கமலாபுரம் அருகே, எர்காட்டூர் என்ற இடத்தில் இயங்கி வரும் எண்ணெய் கிணற்றை, மேதாபட்கர் நேரில் பார்வையிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka