திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராஜகொத்தமங்கலத்தை
சேர்ந்தவர் நடராஜன் (72). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது
மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு புனிதா, கவிதா ஆகிய மகள்கள் உள்ளனர். இருவருக்கும்
திருமணமாகி விட்டது.
புனிதா
தனது கணவர் பாலசுந்தரத்துடன் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிளாகத்தில்
வசித்து வருகிறார். கவிதாவின் கணவர் ராஜேந்திரன்.
இவர்கள்
துபாயில் வசிக்கிறார்கள். மகளை பார்ப்பதற்காக கஸ்தூரி துபாய் சென்றார். வீட்டில்
தனியாக இருந்த நடராஜன் கடந்த 4 நாட்களுக்கு முன் மூத்த மகள் புனிதா வீட்டிற்கு சென்றார்.
நடராஜன்
வீடு அருகே குடிநீர் பைப் உள்ளது. அதில் தண்ணீர் பிடிக்க அதே பகுதியை சேர்ந்த
செந்தில் சென்றார். அப்போது நடராஜன் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை
பார்த்தார்.
இது
குறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் வீட்டிற்கு
சென்று இருந்த நடராஜன் உடனடியாக ஊர் திரும்பினார்.
வீட்டின்
கதவை திறந்து பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 4 பீரோ
உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
பீரோவில்
இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.900 ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்ததை
கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம்
என கூறப்படுகிறது.
கொள்ளையர்கள்
ஜன்னலை உடைத்து உள்ளே சென்று தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
பீரோவில்
இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி பொருட்கள், டி.வி.டி பிளேயர், எமர்ஜென்சி விளக்கு உள்ளிட்டவைகளை அவர்கள் எடுத்து செல்லவில்லை. அதனை
அங்கு சிதற விட்டு சென்றுவிட்டனர்.
இந்த
கொள்ளை குறித்து நடராஜன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி.
கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர்
அருள் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
திருவாரூரில்
இருந்து போலீஸ் மோப்ப நாய் மெர்சி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டில்
இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. தடயவியல் துணை இயக்குனர் ஆமிலா கொள்ளை நடந்த
வீட்டில் பதிவான ரேகைகளை சேகரித்தார்.
கொள்ளையர்களை
போலீசார் தேடி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக