ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


கோரையாற்றில் புதிய பாலம் கட்டகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதடைந்த பாலம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டூர் ஒன்றியக்குழு சார் பில் தட்டாங்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன் றிய நிர்வாகிகள் செந்தில்நாதன், தங்கையன், ஜெயராமன் ஆகி யோர் தலைமை தாங்கினர். உலகநாதன் எம்.எல்.ஏ., முன் னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணி யம், மாவட்ட செயலாளர் செல்வராசு, முன்னாள் ஒன் றிய குழு தலைவர் அருணா சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேச்சுவார்த்தை

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த திருவாரூர் கோட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் வில்லாளன், மன்னார்குடி உதவி பொறி யாளர் மாசிலாமணி, தாசில் தார் ரெங்கசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண் ணதாசன், அறிவானந்தம் ஆகியோர் சாலை மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் பாலத்தின் கட்டுமான பணி தொடங்கப்படும் என அதி காரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட் டம் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka