சனி, 7 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

 திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நம் பிக்கை தொண்டு நிறு வனம்  ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் உழவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தொண்டு நிறுவன இயக்குநர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மெய்கண்டன் வரவேற்றார். ஓய்வு விவசாய இணை இயக்குநர் லெக்ஷ்மிநாராயணன் நவீன விவசாய முறைஇயற்கை விவசாயம்நெல்உளுந்து போன்றவைகளை பயிரிடுவது குறித்து விளக்கினார். கால்நடை மருத்துவர் காரைக்கால் டாக்டர் கோபி நாத் கால்நடை வளர்ப்புபராமரிப்புநோய்கள் குறித்து விளக்கினார். 



சௌந்தர்ராஜன் பேசுகையில்: விவசாயிகளை சந்தித்து விவசா யம் குறித்த சந்தேகங்களுக்கு விவசாய அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றார். மேலும் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை சீற்றம் குறித்த தகவல்கள் செல் போனில்  கிடைக்கும் வசதி குறித்து விளக்கினார். மேலும் 18004198800 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால் இலவசமாக அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்றார். மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், கூட்டுறவு வங்கி தலைவர் குமார், உழவர் மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அப்பகுதி விவசாயிகள், உழவர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை நாராயணன், கிருஷ் ணன், கோகிலா, வள்ளி, இந்திராணி செய்திருந்தனர். தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka