திங்கள், 23 பிப்ரவரி, 2015

சாரணிய திரளணி முகாம் 37 பள்ளிகள் பங்கேற்பு



திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் சாரண, சாரணிய திரளணி முகாம் நடைபெற்றது. இதில் 37 பள்ளி களைச் சேர்ந்த 631 சாரணர் கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட பாரத சாரண சாரணியர்கள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திரளணி முகாம் நேற்று நடைபெற்றது. பாரத சாரண, சாரணியர் மாவட்ட செயலாளரும் தலைமையாசிரியருமான செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட பயிற்சி ஆணையர் மோகன், அமைப்பு ஆணையர் சீனிவாசன், உதவி தலைமையாசிரியர் வெங்கடேசன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், கலைச்செல்வன், அன்புக்குமார், அய்யம்பெருமாள், கவிதா, கோமதி, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குருதட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட சார ணிய ஆணையர் கல்யாணி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான ஏணி பற்றுதல், டயர் உள்ளே செல்லுதல், கயிற்றை பிடித்து செல்லுதல், தீக்குழி தாண்டுதல், கயிற்றில் ஏறுதல், ஓவியம் வரைதல், கார்ட்டூன் வரைதல், பந்து அடித்தல், தடை தாண்டுதல், பாடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பள்ளி அளவிலான உடல்திறன் போட்டி, அணி நடை போட்டி, பொருட்காட்சி மற்றும் பாடித்தீ நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு இதில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் மாவட்ட முதன்மை ஆணையருமான நிர்மலா வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் விஜயா, பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், அப்துல்லா, பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி செயலாளர் சக்கரபாணி நன்றி கூறினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 37 பள்ளிகளை சேர்ந்த 346 சாரணர்கள், 285 சாரணியர்கள், 1 நீலப்பறவை, 4 திரிசாரணர்கள் 54 சாரண ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி தலைவிகள் உட்பட 690 பேர் கலந்துகொண்டனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka