திருத்துறைப்பூண்டி, : நெடும்பலத்தில் இன்று நடக்கவிருந்த கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதிகாரிகள்
நடத்திய சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டிக்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலிருந்து வரும் அரசு மற்றும்
தனியார் பேருந்துகள் நெடும்பலம் கடைத்தெரு வழியாக செல்லாமல் பைபாஸ் வழியாக சென்று
வருகிறது. இதை கண்டித்து நெடும்பலம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் இன்று (9ம் தேதி) கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட் டம்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான சமா தான கூட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா
அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.
தாசில்தார் மதியழகன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொறியாளர் அசோகன், எஸ்ஐ கல்யாணசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நெடும்பலம் வர்த்தகர் சங்க தலைவர் சுப்பை யன், துணை தலைவர் டாக்டர் சகாயம், செயலா ளர் முத்து, உறுப்பினர் மாசிலாமணி, ஊராட்சி தலைவர் விஜயா பங்கேற்றனர். கூட்டத்தில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலிருந்து வரும் அரசு மற்றும் அனைத்து தனியார் பேருந்துகள் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் கடைத்தெரு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக