பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வினியோகத்தை
கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க மாத்திரைகள்
தேசிய குடற்புழு நீக்கும் நாளையொட்டி திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு மாவட்ட கலெக்டர் மதி வாணன் தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரைகள் வினி யோகத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 1 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் குடற்புழு தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. குடற்புழு தொற்று நோயை முற்றிலும் ஒழிக்கும் விதமாக 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனை வருக்கும் மாத்திரை வழங்கப் படுகிறது. விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) “அல்பெண்டசோல்” மாத் திரை வழங்கப்படும்.
குடற்புழு தொற்று நோயானது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் சோர்வு உண்டாகி, பசியின்மையால் பாதிக்கப் படுவார்கள். ரத்தசோகையும், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கும் ஏற்படும். மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் குடற் புழு தொற்று நோயை தடுப் பதற்கு உணவு உட்கொள்ளும் முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்.
நோயை தடுக்கும் பழக்க வழக்கங்கள்
பாதுகாப்பாக கொதித்த ஆறவைத்த நீரை பருகுவது, பழங்கள், காய்கறிகளை கழு விய பின் சாப்பிடுவது, காலனி கள் அணிவது போன்ற பழக்க வழக்கங்களும் நோய் வருவதை தடுக்கும். பள்ளிச்செல்லும் குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களிலும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அதிகாரி மோகன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுமதி, உதவி கலெக் டர் முத்துமீனாட்சி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நிர்மலா, மாவட்ட கல்வி அதி காரி அருள்மணி, சுகாதார பணிகள் உதவி இயக் குனர் ரவிச்சந்திரன், பள்ளி தாளா ளர் வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜீவானந் தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக