சனி, 28 பிப்ரவரி, 2015

காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு ஓராண்டு சிறை





காசோலை மோசடி வழக்கில் தொடர்புடையவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை - ஜாம்பவானோடையைச் சேர்ந்த அய்யாதுரைதேவர் மகன் பாண்டிதுரையிடம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ராமநாதன் என்பவர் 22.6.2013-ல் ரூ. 4.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ஈடாக வங்கி காசோலையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை பாண்டிதுரை வங்கியில் செலுத்தியபோது, ராமனாதன் வங்கிக் கணக்கில் போதிய தொகை இல்லை என காசோலைகள் திரும்ப வந்துவிட்டனவாம். இதுதொடர்பாக பாண்டிதுரை திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி எம். மகாலெட்சுமி ராமநாதனுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், கடன் தொகை ரூ, 4.5 லட்சத்தை 2 மாத காலத்துக்குள் பாண்டிதுரையிடம் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka