திருத்துறைப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற தலைமை காவலர் வீட்டிலிருந்து 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராஜகொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ரெ. நடராஜன் (72). ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. வெளிநாட்டில் உள்ள மூத்த மகளின் வீட்டுக்கு நடராஜனின் மனைவி கஸ்தூரி சென்றுள்ளார்.
இதனால், நடராஜன் வீட்டை பூட்டிவிட்டு தில்லைவிளாகத்தில் உள்ள இளையமகள் வீட்டுக்கு கடந்த 5 நாள்களுக்கு முன்பு சென்றாராம்.
நடராஜன் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த பக்கத்து வீட்டினர், அவருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணதாசன், காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு, உதவி ஆய்வாளர் அருள்பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். திருவாரூரிலிருந்து மோப்ப நாய் மெர்சி வரவழைக்கப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக