சனி, 28 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்





திருத்துறைப்பூண்டி, :திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நகரில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது.திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மன்னார்குடி கோட்ட தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் துவங்குகிறது. 1ம் தேதி சாத்தங்குடி, குன்னூர், குரும்பல், 3ம் தேதி தீவாம்மாபுரம், பழயங்குடி, 4ம் தேதி காடுவாகொத்தமங்கலம், செட்டியமூலை, 5ம் தேதி மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், 6ம் தேதி நுணாக்காடு, எழிலூர், 7ம் தேதி விளத்தூர், அம்மனூர், 9ம் தேதி திருவலஞ்சுழி, ஆலத்தம்பாடி, திருத்தங்கூர், 10ம் தேதி கட்டிமேடு, நெடும்பலம், ஆதிரெங்கம், 11ம் தேதி சேகல், தேசிங்குராஜபுரம், 12ம் தேதி கொருக்கை, 13ம் தேதி வேளூர், 14ம் தேதி கீரக்களுர், விளக்குடி, 16ம் தேதி திருப்பத்தூர் பனையூர், கோமல் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

17ம் தேதி கீராலத்தூர், ஆண்டாங்கரை, 18ம் தேதி ஆலிவலம், 19ம் தேதி மேலமருதூர், பிச்சன்கோட்டகம், 20ம் தேதி கொக்காலடி ஆகிய கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அந்தந்த தேதிகளில் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஒன்றிய தலைவர் வேதநாயகி சிங்காரவேலு கேட்டுக்கொண்டுள்ளார்.  அதேபோல் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் 2ம் தேதி 1 முதல் 4வது வார்டு, 4ம் தேதி 5 முதல் 7வது வார்டு, 6ம் தேதி 8 முதல் 11வது வார்டு, 12ம் தேதி 12 முதல் 15வது வார்டு, 16ம் தேதி 16 முதல் 19வது வார்டு, 19ம் தேதி 20 முதல் 22வது வார்டு, 20ம் தேதி 23, 24வது வார்டுகளில் முகாம் நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka