புதன், 4 பிப்ரவரி, 2015

நியாய விலைக் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம் - ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மற்றும் திருவாரூரில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நியாய விலைக் கடையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல் இருப்பு குறைவுக்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும். நியாய விலைக்கடை திட்டப் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில்... நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலர் எஸ். பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ்கண்ணன், அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் செல்வன், மாவட்டச் செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூரில்... மாவட்டத்தில் மொத்தமுள்ள 639 கடை ஊழியர்களில் 420 பேர் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவாó நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர் நகரில் சீதளாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் திறந்திருந்தன. சில இடங்களில் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka