திருவாரூர் மாவட்டத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம்
குறைந்த வட்டியில் தானிய ஈட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் தானியங்களை கூடுதல் விலைக்கு விற்பனை
செய்ய, விஞ்ஞான முறையில் சேமித்து வைக்க மாவட்டத்தில் நபார்டு வங்கி
நிதியுதவியுடன் 78 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 100 மெட்ரிக்
டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 500 மெட்ரிக்
டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருளான நெல்
தானியத்தை கிடங்குகளில் ஈடாடு வைத்து அதன் மதிப்பில் 70 சதவீதம்
வரை தானிய ஈட்டுக் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
தானிய ஈட்டுக் கடனுக்கு 13 சதவிகித வட்டி வசூலிக்கப்படும்.
அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ. 3 லட்சம் வரை ஈட்டுக் கடன் வழங்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக