சனி, 28 பிப்ரவரி, 2015

அறுவடை எந்திர உரிமையாளருக்கு கொலை மிரட்டல் அரசு பஸ் கண்டக்டர் கைது




திருத்துறைப்பூண்டியில் அறுவடை எந்திர உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் குண சேகரன் மகன் மணிகண்டன் (வயது35). இவர் அறுவடை எந்திரம் வைத்து, அதை வாடகை விட்டு தொழில் செய்து வருகிறார். இவரிடம் மருதவனம் வடக்கு தெருவை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் குறிஞ்சிவேந்தன் (34) என்பவர் அறுவடை எந்திரத்தை வாடகைக்கு எடுத்து இருந்தார். இதற்கான வாடகை தொகையை கேட்பதற்காக சம்பவத்தன்று மணிகண்டன், குறிஞ்சிவேந்தனின் வீட்டிற்கு சென்றார். அப்போது குறிஞ்சிவேந்தன், மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மணிகண்டன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில், குறிஞ்சிவேந்தன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத் தார்.

கைது

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்- இன்ஸ்பெக்டர்கள் அருள் பிரியா, கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குறிஞ்சிவேந்தனை கைது செய்தனர். இதையடுத்து குறிஞ்சிவேந்தன் திருத்துறைப் பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, குறிஞ்சிவேந்தனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது





2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவாருர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று 27-02-2015(வெள்ளி அன்று) 2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை விளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.கோவிந்தசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி துவங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளை ஓன்றிய குழு உறுப்பினர் திருமதி S.ஞானசௌந்தரி அவர்கள் துவங்கி வைத்தார்.

மாலை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி A.குமுதம் M.sc B.Ed அவர்கள் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு M.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் 2004 - 2005 மாணவர்கள் முன்னாள் ஆசிரிய ஆசிரியைகளூக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். முன்னாள் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஐயா A.சுந்தரேசன் அவர்களின் பெயரில் நினைவு சுழற்கோப்பை வழங்கபட்டது.
 

மேலும் இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக மாற்றபடுவதற்காக 2004 - 2005 மாணவர்கள் சார்பாக நன்கொடை வழங்கபட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஆசிரியை திருமதி K.தனம் M.A,B.Ed அவர்கள் நன்றியுரையாற்றினார் 















திருத்துறைப்பூண்டியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்





திருத்துறைப்பூண்டி, :திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நகரில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது.திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மன்னார்குடி கோட்ட தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் துவங்குகிறது. 1ம் தேதி சாத்தங்குடி, குன்னூர், குரும்பல், 3ம் தேதி தீவாம்மாபுரம், பழயங்குடி, 4ம் தேதி காடுவாகொத்தமங்கலம், செட்டியமூலை, 5ம் தேதி மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், 6ம் தேதி நுணாக்காடு, எழிலூர், 7ம் தேதி விளத்தூர், அம்மனூர், 9ம் தேதி திருவலஞ்சுழி, ஆலத்தம்பாடி, திருத்தங்கூர், 10ம் தேதி கட்டிமேடு, நெடும்பலம், ஆதிரெங்கம், 11ம் தேதி சேகல், தேசிங்குராஜபுரம், 12ம் தேதி கொருக்கை, 13ம் தேதி வேளூர், 14ம் தேதி கீரக்களுர், விளக்குடி, 16ம் தேதி திருப்பத்தூர் பனையூர், கோமல் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

17ம் தேதி கீராலத்தூர், ஆண்டாங்கரை, 18ம் தேதி ஆலிவலம், 19ம் தேதி மேலமருதூர், பிச்சன்கோட்டகம், 20ம் தேதி கொக்காலடி ஆகிய கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அந்தந்த தேதிகளில் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஒன்றிய தலைவர் வேதநாயகி சிங்காரவேலு கேட்டுக்கொண்டுள்ளார்.  அதேபோல் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் 2ம் தேதி 1 முதல் 4வது வார்டு, 4ம் தேதி 5 முதல் 7வது வார்டு, 6ம் தேதி 8 முதல் 11வது வார்டு, 12ம் தேதி 12 முதல் 15வது வார்டு, 16ம் தேதி 16 முதல் 19வது வார்டு, 19ம் தேதி 20 முதல் 22வது வார்டு, 20ம் தேதி 23, 24வது வார்டுகளில் முகாம் நடைபெறுகிறது.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka