ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நமது சட்டமன்ற (MLA) தொகுதி ஓர் சிறிய பார்வை ..

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை (தனி) தொகுதி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து பின்னர் நாகை மாவட்டத்தில் இருந்து தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

தொகுதியில் உலகப்புகழ் பெற்ற முத்துப்பேட்டை லகூன் அலையாத்திக் காடுகளும், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் ஆலயம், தில்லைவிளாகம் ராமர்கோவில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஆலயம், ஜாம்பவானோடை தர்ஹா உள்ளிட்டவை சிறப்பு அம்சங்களாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:  திருத்துறைப்பூண்டி வட்டம்,


  1. திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் 32 ஊராட்சிகள்,
  2.  முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சிகள்,


மன்னார்குடி வட்டம் (பகுதி)  கிராம ஊராட்சிகள்: ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.



இதுவரை எம்.எல்.ஏக்கள்...


  1. 1957           சர்தார் வேதரெத்தினம், கள்ளிக்குடி வி. வேதையன                              (இரட்டை உறுப்பினர் தொகுதி)
  2. 1962 ஏ.கே.சுப்பையா -இந்திய கம்யூனிஸ்ட்
  3. 1967 என். தர்மலிங்கம் - திமுக
  4. 1971 மணலி சி. கந்தசாமி - இந்திய   கம்யூனிஸ்ட்
  5. 1977 பி. உத்திராபதி - இந்திய கம்யூனிஸ்ட்
  6. 1980 பி. உத்திராபதி - இந்திய கம்யூனிஸ்ட்
  7. 1984 பி. உத்திராபதி - இந்திய கம்யூனிஸ்ட்
  8. 1989 ஜி. பழனிச்சாமி - இந்திய கம்யூனிஸ்ட்
  9. 1991 ஜி. பழனிச்சாமி - இந்திய கம்யூனிஸ்ட்
  10. 1996 ஜி. பழனிச்சாமி - இந்திய கம்யூனிஸ்ட்
  11. 2001 ஜி. பழனிச்சாமி  - இந்தியகம்யூனிஸ்ட்
  12. 2006 கே. உலகநாதன் - இந்திய கம்யூனிஸ்ட்
  13. 2011 கே. உலகநாதன் - இந்திய கம்யூனிஸ்ட்




இத்தொகுதியில் 1962 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தலில் திமுக ஒரு முறையும், கம்யூனிஸ்ட் கட்சி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியை 45 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துக்கொண்டு வருகிறது.

1977-இல் இருந்து இத்தொகுதி தனித் தொகுதியாக இருந்து வருகிறது.


  • திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகள்



  • முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகள்


மொத்த வாக்குச்சாவடிகள்: 270



நன்றி
தினமணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka