செவ்வாய், 26 ஏப்ரல், 2016

காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே காவிரி உரிமையைப் பெற முடியும் :கருணாநிதி

Image result for kalaignarகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே கர்நாடகத்திடமிருந்து காவிரி உரிமையைப் பெற முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

திருவாரூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற  திமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர்  கருணாநிதி திருவாரூருக்கு இனி செய்ய ஒன்றும் இல்லையென்ற அளவுக்கு அனைத்தையும் செய்து விட்டார்.

2016, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக அதிமுகவால் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடியவில்லை. அதனால் தான் இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடாமல் உள்ளது.

காவிரிப் பிரச்னைக்கு இறுதித் தீர்ப்பு பெற்றுக் கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இறுதித் தீர்ப்பை மட்டுமே வைத்து காவிரியில் கர்நாடகத்திடமிருந்து நீரைப் பெற்றுவிட முடியாது. அந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டு, பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே கர்நாடகத்திடமிருந்து காவிரி உரிமையைப் பெற முடியும்.

இல்லையெனில், மத்திய அரசுக்குக்கூட  கர்நாடகத்தை தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க கட்டாயப்படுத்த முடியாது. காவிரி இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது ஜெயலலிதா தான். அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம்,  ஒழுங்காற்றுக்குழு அமைக்கவில்லையே. எனவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியால் மட்டுமே முடியும் என்றார் துரைமுருகன்.

கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  ரஜினிசின்னா, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு  அமைப்பாளர் தாஜூதீன், பகுத்தறிவு கலை இலக்கிய அமைப்பாளர் கருணாநிதி, நகரச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka