ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மெசேஜ் பண்ணி மாட்டிக்காதீங்க!

நீங்கள் தொடர்பு கொண்ட எண், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது’

– இளைஞர் செல்போனில் தனது தோழியை அழைத்தபோது, பலமுறை இந்த பதிலே வந்தது.

சில நேரங்களில் மணி ஒலித்தது, ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை. அவ்வப்போது ‘அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்றும் சொன்னது.

‘தோழி ஏன் அழைப்புகளை ஏற்கவில்லை. தன் மீதான கோபம் இன்னும் அவளுக்கு தீரவில்லையோ!’ என்று நினைத்தவர், ‘கால் மீ, அர்ஜெண்ட்’ என மெசேஜ் அனுப்பிவிட்டு காத்திருந்தார். அப்படியும் அழைப்பு வரவில்லை.

அந்த பெண் எப்போதும் அளவாகத்தான் பேசுவாள். அவனும், அவளும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள். வழக்கமாக வேலைமுடிந்துவந்த பின்பு இரவில் பேசிக்கொள்வார்கள். இன்னொரு தோழியால் அவர்கள் இருவருக்குள்ளும் மோதல் வந்துவிட்டது. அதன் பின்புதான் அவள், அவனிடம் பேசுவதை தவிர்க்கிறாள். அவனோ, எப்படியாவது அவளிடம் மீண்டும் பேசிவிடவேண்டும் என்று விரும்பினான்.

அதனால் தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன்பு தோழியின் எண்ணை அழைத்துப் பார்ப்பதும், ‘என்னை பிடிக்கலையா? என்னுடன் பேச மாட்டாயா? உன்னைப் பார்க்கணும்போல இருக்கு, நாம பழகியதை மறந்துவிட்டாயா?’ என பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வைத்தான்.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் அவனது முயற்சி பலித்தது. அழைப்பு ஏற்கப்பட்டது. எதிர்முனையில் கேட்டது, ஆண் குரல். அந்த குரல் அவனை கொச்சை வார்த்தைகளால் திட்டித் தீர்த்தது.

கேட்க சகிக்காத இளைஞன், தோழியின் பெயரைச் சொல்லி ‘அவளது நம்பர்தானே இது?’ என்று கேட்டபோது, ‘‘இப்படி எத்தனை பேர்டா கிளம்பி இருக்கீங்க, அவள் இருக்காளா, இவள் இருக்காளா? பெண் குரல் கேட்காதா என்று தூண்டில் போடுகிறீர்களா?’’ என்று கேட்டதுடன் நில்லாமல், கேவலமாக திட்டினார்.

தாங்க முடியாமல் அந்த இளைஞன் போன் இணைப்பை துண்டித்தான். ஆனால் எதிர்முனையில் பேசிய முரட்டு மனிதனோ மீண்டும் மீண்டும் போனில் வந்து, தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தான்.

பொறுத்துப்பார்த்த இளைஞனும் பின்பு திட்டிவிட்டு, அடுத்து அந்த எண்ணில் இருந்து அழைப்பு வராதபடி, செல்போனில் மாற்றங்களை செய்து வைத்தான்.

ஒருவாரம் கடந்து திடீரென்று இன்னொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இளைஞன் ‘ஹலோ’ என்றான்.

 ‘‘மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம்’’ என்றது அந்த குரல். முதலில் யாரோ கலாய்க்கிறார்கள் என்று வேடிக்கையாக பதிலளித்த இளைஞன், ‘பெண் போலீஸ்’ குரல் உயர்ந்ததும் சாந்தமாக பதில் அளித்தான்.

‘‘யார் நீ, இந்த எண்ணிற்கு தினமும் இரவில் போன் போடுவதும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதுமாக இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும். உன்மேல் கம்ப்ளெய்ன்ட் வந்திருக்கு..’’ என்று விவரம் கூறினார்.

‘‘இது என் தோழியின் எண், நாங்கள் வழக்கமாக இரவில்தான் பேசுவோம். இப்போது அவள் போனை எடுப்பதில்லை. திடீரென ஒரு ஆள் போனை எடுத்து திட்டினான். நானும் பதிலுக்கு திட்டிவிட்டேன், இதுதான் நடந்தது’’ என்று இளைஞன் கூறினான்.

இளைஞன் காவலரின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து தகவல் கூறியதால், காவலர் அந்த உண்மையை அவனிடம் கூறினார்.


‘‘இந்த எண், கொஞ்ச காலத்திற்கு முன்பு உன் தோழியிடம் இருந்திருக்கும். இப்போது வேறு ஒரு பெண் பயன்படுத்துகிறார். அவளை பிடிக்காத யாரோ, அந்த எண்ணை பொது இடத்தில் ‘விரும்புபவர்கள் அழைக்கவும்’ என்று எழுதி வைத்திருக்கிறான். அதனால் தேவையற்ற போன் அழைப்புகள் அந்த பெண்ணிற்கு இரவு நேரங்களில் வருகிறது. அந்த நேரத்தில் நீங்களும்            அழைத்ததால் புகாரில் பதிவு செய்துள்ளோம். இனியும் அந்த எண்ணிற்கு தேவையில்லாமல் அழைத்தால், நீங்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்’’ என்றார்.

நாம சொல்ல வர்றது இதுதானுங்க!

இலவச சிம்கார்டுகள் அடிக்கடி கிடைப்பதால் பெண்களின் நம்பர் மாறிக்கொண்டே இருக்கிறது. அது தெரியாமல், ‘என்னை மறந்திட்டியா’, ‘நாம எப்படி எல்லாம் இருந்தோம்ங்கிறது உனது நினைவில் இல்லையா?’, ‘உன்னை நினைச்சே ஏங்கிட்டு இருக்கிறேன்’.. என்பது மாதிரி மெசேஜ் பண்ணி மாட்டிக்காதீங்க!

thanks

dinathanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka