திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செங்கமல தெருவை சேர்ந்தவர் அசோகன்(வயது55). டிராவல்ஸ் உரிமையாளர். இவரது வீட்டின் கொல்லைபுறத்தில் உள்ள கூரை வீட்டில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அசோகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வீரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோகன் வீட்டில் படுத்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட அந்த பாம்பு 8 அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் வகையை சேர்ந்ததாகும்.
இதேபோல கொக்கலாடி நடுத்தெருவை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(65) என்பவர் வீட்டின் கொல்லைபுறத்தில் கோழி கூண்டு அருகே ஒரு பாம்பு இருப்பதாக கொக்கலாடி ஊராட்சி தலைவர் சிவசாமி திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இந்த 2 பாம்புகளும் நாச்சிக்குளம் வனச்சரகர் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த 2 பாம்புகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக