குறைந்த எடையுடன் கைகால் அசைவின்றி ஊனத்துடன் பிறந்தவர் காமராஜ். தந்தையிடம் அடம்பிடித்து பள்ளிக்கு சென்றவர். எங்கே செல்வதாக இருந்தாலும் அவரை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும். தந்தை தான் பள்ளி வாழ்க்கை முழுவதும் அவரை தூக்கித் திரிந்தார்.
10-ம் வகுப்பில் 403 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1007 மதிப்பெண்களும் எடுத்தார்.
பல எதிர்ப்பபுகளுக்கு மத்தியில் கல்லூரியில் சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் எம்.காம் முடித்துவிட்டார். சி.ஏ., படிக்க வேண்டுமென்பது அவர் கனவு. இதற்கிடையில் நமக்கு நண்பர்கள் உதவியது போல் நாம் ஏன் பிறருக்கு உதவ கூடாது என்ற தொண்டு எண்ணம் அவருக்குள் அரும்பியிருக்கிறது. உடனே நாட்டுநலப்பணி திட்டத்தில் சேர்ந்து 10 நாள் முகாமிற்கு சென்று அங்கு மதுவின் தீமைகளைப் பற்றி பேசி பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார். தன்னுள் பேச்சுத்திறமை இருப்பதை உணர்ந்து கொண்டு, பேச்சாளராகி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பல பரிசுகளையும் வாங்கியிருக்கிறார்.
இதற்கிடையில் சிஏ படித்து விட வேண்டுமென்ற அவரின் இலட்சியத்திற்கு பெரிய இடி. குளியல் அறையில் உட்கார்ந்து இருக்கும் போது தடுமாறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து போய் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகியும் போச்சாம். செயற்கை எலும்பு வைக்க பல இலட்சம் ஆகும் என்றனர் மருத்துவர்கள். வசதியில்லை இருப்பினும் மனந்தளராமல் செயற்றை மூட்டு மாற்றினார். சி.ஏ முடித்தார். பல பேருக்கு உதவும் வாழ்க்கை வாழ்வேன் என நம்பிக்கையுடன் பேசினார்.
அடிப்பட்டு, எலும்பில் சீல்பிடித்து மருத்துவம் செய்து கொள்ள முடியாத நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம். இதை நினைக்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா...
வாழ போராடும் அவர்களின் முன்பு நம் நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போதெல்லாம் மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வியடைந்தாலே வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சியை கையாளுகின்றனர். வாழ்க்கையில் எவ்வளவு அடிப்பட்டாலும் நாம் எடுத்துக்கொண்ட கொள்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் உதித்தால் போதும்....வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து விடலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக