திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி அருகே விஷ தேனீக்கள் தீவைத்து அழிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆட்டூர் ரோடு மரைக்கா கோரையாறு பாலம் அருகில் உள்ள மரங்களில் விஷ தேனீக்கள் கூடு கட்டி இருந்து கொண்டு அவ்வழியாக செல்பவர்களை கடித்து துன்புறுத்தி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் 1வது வார்டு கவுன்சிலர் கீர்த்திகா முரளி, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைதொடர்ந்து நிலைய அதிகாரி (பொ) வீரமணி தலைமையில் வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி 3 மரங்களில் இருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட தேனீக்களை தீவைத்து அழித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக